அதிவேகப் போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் சீனா இன்று மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. தண்டவாளத்தைத் தொடாமல், காந்த விசையின் மூலம் அந்தரத்தில் மிதந்து செல்லும் 'மேக்லேவ்' (Maglev) ரயிலின் புதிய மாடலை சீனா இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இந்த ரயில் மணிக்கு 700 கி.மீ வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.
இது தற்போதைய அதிவேக ரயில்களை விட இரு மடங்கு வேகமானது மட்டுமல்லாமல், வணிக ரீதியான விமானங்களின் வேகத்திற்கு (800-900 கி.மீ) மிக நெருக்கமானது.
இந்தத் தொழில்நுட்பம் உராய்வைக் குறைப்பதால் சத்தம் மிகக் குறைவாக இருக்கும் மற்றும் பராமரிப்புச் செலவும் குறையும் என்று சீனப் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ரயிலின் மூலம் பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய் இடையிலான பயண நேரம் வெறும் 2.5 மணி நேரமாகக் குறையும்.
தற்போதுள்ள புல்லட் ரயில்களில் இதற்கு 5 மணி நேரத்திற்கும் மேலாகிறது. 2030-க்குள் இந்த ரயிலை நாடு முழுவதும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர சீனா திட்டமிட்டுள்ளது. இது உலகளாவிய போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.